இதனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை, கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஒரு கிராம் 16,800 ரூபாய், ஒரு சவரன் 1,34,400 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. ஆனால், ஜனவரி 30-ஆம் தேதி 10 சதவீதத்திற்கும் மேல் அதிரடியாக குறைந்த தங்கம் விலை, அதை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.


