தங்கம் விலை இன்றும் (டிசம்பர் 30)அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600க்கும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.360 குறைந்து ஒரு கிராம் ரூ.10,505க்கும், சவரனுக்கு ரூ.2,880 குறைந்து ஒரு சவரன் ரூ.84,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.258க்கும், கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,58,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான் 2026 புத்தாண்டில் இதுபோலவே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா அல்லது கூடுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இதுதொடர்பாக நிபுணர்கள் அளித்துள்ள விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.


