தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலைகள் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஒரு நாள் குறையும் தங்கம் விலை, மறுநாளே திடீரென உயர்ந்து வருகின்றன. இதனால், தங்கம் வாங்க திட்டமிடுபவர்கள் எப்போது வாங்கலாம் என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே, திருமண சீசன் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது தங்கம் வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்த சூழலில், தங்கத்தின் விலை ரூ.70,000 வரை குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதுபற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்துகொள்வோம்.


