இந்தியாவில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட திருத்தம், தங்கத்திற்கான பாதுகாப்பான புகலிடத்திற்கான தேவையை மேலும் அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனினும், சில நாடுகள் தங்கத்தை மலிவான விலையில் விற்று வருகின்றன.
கன்னட நடிகை ரன்யா ராவ் மார்ச் 3ஆம் தேதி கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தியாவை விட மற்ற நாடுகளில் தங்கம் குறைவான விலையில் விற்கப்படுகிறதா என்று சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, மலிவு விலையில் தங்கம் விற்கும் நாடுகள் மற்றும் அங்கு தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
மலிவான விலையில் தங்கத்தை விற்கும் முதல் 9 நாடுகள் (10 கிராமுக்கு):
பஹ்ரைன்: 10 கிராமுக்கு 359 BHD அல்லது ரூ.83,085.5
குவைத்: 10 கிராமுக்கு குவைத் தினார் 291.1 அல்லது ரூ.82,421.48
மலேசியா: 4,230 RM அல்லது ரூ.83,516
ஓமன்: OMR 369 அல்லது ரூ.83,296
கத்தார்: கிராமுக்கு QAR 352 அல்லது ரூ.87,770
சவுதி அரேபியா: 3,590 சவுதி ரியால் அல்லது ரூ.83,485.22
சிங்கப்பூர்: SGD 1,331 அல்லது ரூ.87,231.17
துபாய்: AED 3,507.4 அல்லது ரூ.83,292.65
அமெரிக்கா: $950 அல்லது ரூ.82,858.35
மேற்குறிப்பிட்ட விலைகள் அனைத்தும் goodreturns.com தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. மேலும், இதன் உண்மையான விலை மாறுபடலாம்.
டெல்லி, மும்பையில் தங்கத்தின் விலை:
மும்பையில் 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.80,500 ஆகவும், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.87,820 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், டெல்லியில் தங்கத்தின் விலைகள் முறையே ரூ.80,650 மற்றும் ரூ.87,970 ஆக உள்ளன.
இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி
இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி தற்போது 6 சதவீதமாக உள்ளது. 15 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 2024-25 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6 சதவீதமாகக் குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, ஒருவர் துபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தைக் கொண்டு வரும்போது, துபாயில் அதை அவர் வாங்கிய விலையின் அடிப்படையில் இல்லாமல், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தங்க விகிதத்தின் அடிப்படையில் (‘கட்டண மதிப்பு’ அல்லது ‘அடிப்படை விகிதம்’ என்று அழைக்கப்படுகிறது) அதற்கு சுங்க வரி விதிக்கப்படும். தற்போது, தங்கத்தின் மீதான சுங்க வரி 10 கிராமுக்கு $927 ஆக உள்ளது. இது பிப்ரவரி 28 அன்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (CBIC) $938 இலிருந்து $927 ஆக குறைக்கப்பட்டது.
இதையும் படிக்க: இந்தியாவில் எந்த மாநில மக்கள் அதிக தங்கம் வைத்துள்ளனர் தெரியுமா? – தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!
சர்வதேச விமானங்களில் எவ்வளவு தங்கத்தை எடுத்துச் செல்லலாம்?
1967ஆம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ், இந்திய பயணிகள் 1 கிலோ வரையிலான தங்கத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, வரி ஏதும் இல்லாமல் ஆண்கள் 20 கிராம் தங்கத்தையும், பெண்கள் 40 கிராம் (பெண் பயணிகளுக்கு மட்டும் ரூ.1 லட்சம் மதிப்பு வரம்புடன்) தங்கத்தையும் எடுத்து வரலாம்.
குழந்தைகள் 20/40 கிராம் தங்கத்தைக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் பாலினத்தைப் பொறுத்து ரூ.50,000 / ரூ. 1,00,000 வரையிலான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பயணிகள் அல்லது குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வெளிநாட்டில் தங்கிவிட்டு, பிறகு இந்தியா திரும்பும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டைக் கொண்ட பயணிகள் தங்கள் லக்கேஜ் உடன் தங்கத்தைக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதையும் படிக்க: இந்தியாவைவிட துபாயில் தங்கத்தின் விலை மலிவாக இருப்பது ஏன்…? முக்கிய சுங்க விதிமுறைகள் இவைதான்…!
இருப்பினும், இந்த ஆறு மாத காலத்தில் மேற்கொள்ளப்படும் குறுகிய வருகைகள், மொத்தம் 30 நாட்களுக்கு மிகாமல் இருந்தால் மற்றும் அந்த குறுகிய வருகைகளின்போது பயணிகள் ஏற்கனவே இந்த விலக்கைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், லக்கேஜ் உடன் தங்கத்தைக் கொண்டுவர அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில், அந்த குறிப்பிட்ட பயணிக்கு தங்கம் கொண்டுவர தடைவிதிக்கப்படும்.
March 11, 2025 4:32 PM IST
Gold price | இந்தியாவை விட குறைந்த விலையில் தங்கத்தை விற்கும் 9 நாடுகள் எவை தெரியுமா…? அங்கிருந்து எவ்வளவு தங்கம் எடுத்து வரலாம்?