தங்கம் விலை அதிகரிக்க சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதும் காரணமாக கூறப்படுகிறது. அதேபோல, சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள், 5ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்களுக்கு வெள்ளியின் தேவை அதிகரித்து வருவது, வெள்ளி விலை உயர காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், 2026 புத்தாண்டில் தங்கத்தின் விலை உலகளாவிய பொருளாதார நிலைமைகள், புவிசார் அரசியல் அபாயங்கள், மத்திய வங்கி கொள்முதல் மற்றும் மறுசுழற்சி விநியோகங்களைப் பொறுத்து இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.


