இந்தியாவில், தங்கம் வெறும் நகையாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக, அவை முதலீடாகப் பார்க்கப்படுகிறது. பணவீக்கம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக தங்கத்தின் விலை எப்போதும் உச்சத்தில் உள்ளது. இதற்கிடையே, தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேபோல், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், அடுத்த வாரம் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்று கேள்வி மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே உள்ளது. கடந்த கால விலைகள், உலக பொருளாதார நிலைமைகள் மற்றும் நிபுணர்களின் கணிப்புகளின் அடிப்படையில் அடுத்த வாரம் தங்கம் விலை எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.


