உதாரணமாக, உங்களிடம் 10 கிராம் 22 காரட் தங்கம் இருந்தால், அதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் என்றால், இந்த loan to value படி, நீங்கள் சுமார் ரூ.1.19 லட்சம் பெறலாம். அதாவது நீங்கள் 85 சதவீதம் கடன் பெறலாம். இதை விட குறைவாக வாங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. தங்கக் கடனின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், வட்டி விகிதம் தனிநபர் கடனை விட மிகக் குறைவு. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற முக்கிய வங்கிகளில் வட்டி விகிதம் 8.5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை இருக்கும். எஸ்பிஐயில், வட்டி விகிதம் 8.70 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. மேலும், சில என்பிஎஃப்சிகள் 9.5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன.


