அரசு வங்கிகளை பொறுத்தவரை, கனரா வங்கி ஓராண்டுக்கு 8.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் இதற்கான பிராஸஸிங் கட்டணம் 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை இருக்கும். பேங்க் ஆஃப் பரோடாவில் 8.90 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், இறுதி செலவு என்பது பொருந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் GST ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கோல்டு லோனுக்கு 9 சதவீதம் முதல் 10.25 சதவீதம் வரையிலான வட்டியை வழங்குகிறது. மேலும், பிராஸஸிங் கட்டணம் என்பது 0.50 சதவீதம் மற்றும் GST.


