கடந்த ஐந்து ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, NBFCகளின் பங்கு வெகுவாக குறைந்துள்ளது. 2020ஆம் ஆண்டில், மொத்த தங்கக் கடன் சந்தையில் NBFCகளின் பங்கு 69.4 சதவீதமாக இருந்தது. மார்ச் 2025ல், இந்தப் பங்கு 50.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது, அவை கிட்டத்தட்ட 20 சதவீத பங்கை இழந்துள்ளன. அதே காலகட்டத்தில், வங்கிகள் தங்கள் பங்கை 30.6 சதவீதத்திலிருந்து 49.7 சதவீதமாக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


