இந்தியாவில் தங்கம் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. இந்த தங்கம் கடினமான சூழ்நிலைகளில் மக்களுக்கு உதவுகிறது. இருப்பினும், வங்கிகளில் தங்கக் கடன்களுக்கான வட்டி விகிதம் சற்று குறைவாக உள்ளது. ஆனால், தனியார் நிதி நிறுவனங்கள்(NBFCs) அதிக வட்டியை வசூலிக்கின்றன. அதன்படி, நிதி நிறுவனங்களில் கடன் தொகை விரைவாக அனுமதிக்கப்பட்டாலும், குறைந்த வட்டி விகிதங்களின் பலனை பெற விரும்பினால், வங்கிகளுக்கு செல்வதே புத்திசாலித்தனம் என்று கூறப்படுகிறது.


