இந்தியாவில், குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போது, அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது வீட்டில் உள்ள தங்கத்தைப் பற்றித் தான். ஏனென்றால், யாரிடமாவது சென்று கடன் வாங்குவதற்கு பதிலாக, தங்களிடம் உள்ள தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், ஏப்ரல் 1 முதல், தங்க நகைகள் மீதான கடன்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் குறித்து மக்களுக்கு பல கேள்விகள் உள்ளன. அதுதொடர்பான முழுமையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


