இந்த இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நம்மிடம் எழுகின்றன. தங்கத்தை விற்றால், உடனடியாக உங்களுக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும். ஆனால், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தால், நீங்கள் அதன் லாபத்தை இழப்பீர்கள். தங்கத்தை வைத்து கடன் வாங்கினால், உங்கள் தங்கம் அப்படியே இருக்கும், இருப்பினும் நீங்கள் தொடர்ந்து வட்டியை செலுத்த வேண்டும். வட்டியுடன் கடனை செலுத்த தவறினால், கடன் கொடுத்த நிறுவனம் ஏலம் மூலம் தங்கத்தை விற்கலாம்.


