பொதுவாக, இந்தியாவில் தங்கம் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. விழாக்கள், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது ஒரு வழக்கமாக உள்ளது. மேலும், தங்கம் முதலீடுகளுக்காகவும் அதிகளவில் வாங்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உச்சத்தில் இருந்தன. இதைத் தொடர்ந்து தற்போது விலைகள் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தங்க நகைகள் வாங்குவது சிறந்ததா அல்லது நாணயங்களாக வாங்குவது சிறந்ததா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அந்த வகையில், எதிர்காலத்தில் எது நல்ல லாபத்தை தரும் என்று தற்போது பார்ப்போம்.


