இந்தியாவில் தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக, அது பாதுகாப்பு, பாரம்பரியம் மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பல தசாப்தங்களாக, இந்தியக் குடும்பங்கள் நகைகள், நாணயங்கள் அல்லது தங்கக் கட்டியாக அதைச் சேமித்து வைக்கின்றனர். ஆனால், இன்றைய நவீன நிதி யுகத்தில், நகை வடிவில் தங்கத்தை வாங்குவது உண்மையில் லாபகரமானதா என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது. முதலீட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தால், தங்க ETFகள், பிசிகல் கோல்டு-ஐ (Physical Gold) விட அதிக நன்மை பயக்கும் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது.


