உலகில் அதிக தங்கம் வைத்திருப்பது யார்?: உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, உலகில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடு அமெரிக்கா ஆகும். அதன் அதிகாரப்பூர்வ தங்க இருப்பு சுமார் 8,100 டன்கள் ஆகும். இதில் பெரும்பாலானவை ஃபோர்ட் நாக்ஸ் போன்ற பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, ஜெர்மனி சுமார் 3,300 டன் தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் 2,400 முதல் 2,500 டன் தங்கத்தை வைத்துள்ளன. இதற்கிடையே, ரஷ்யாவும் சீனாவும் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக தங்கத்தை வாங்கி வருகின்றன. அவற்றின் இருப்பு இப்போது சுமார் 2,300 டன்களாக உள்ளது.


