Last Updated:
Gold: இந்த தங்கமானது காப்பீடு செய்யப்பட்ட பாதுகாப்பான வாலட்டுகளில் சேமிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தினசரி கோல்டு SIP அமைப்பதற்கான அனுமதியும் யூசர்களுக்கு வழங்கப்படுகின்றன.
‘கோல்டன் ரஷ்’ என்ற புதிய டிஜிட்டல் கோல்டு திட்டத்தை Paytm அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அட்சய திருதியை முன்னிட்டு டிஜிட்டல் கோல்டு சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், ‘கோல்டன் ரஷ்’ (Golden Rush) என்ற ஒரு புதிய திட்டத்தை Paytm அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக யூசர்கள் 24 கேரட் 99.99% தூய தங்கத்தில் முதலீடு செய்து, இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். 500 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான தொகையை Paytm கோல்டில் முதலீடு செய்யும் யூசர்கள் ரிவார்டு பாய்ண்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு முறை நீங்கள் செய்யும் 500 ரூபாய்க்கும் மேற்பட்ட முதலீட்டுக்கு 5 சதவீத டிரான்ஸாக்ஷன் வேல்யூ பாய்ண்டுகளாக உங்களுக்கு வழங்கப்படும். இந்த பாய்ண்டுகள் லீடர் போர்டில் உங்களுடைய பொசிஷனை நிர்ணயிக்கும். இதில் லீடர் போர்டில் உள்ள டாப் யூசர்கள் 100 கிராம் தங்கம் என்ற மொத்த பரிசில் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. Paytm அதன் தங்கத்தை MMTC PAMP என்ற LBMA அங்கீகாரம் பெற்ற சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பெறுகிறது.
மேலும், இந்த தங்கமானது காப்பீடு செய்யப்பட்ட பாதுகாப்பான வாலட்டுகளில் சேமிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தினசரி கோல்டு SIP அமைப்பதற்கான அனுமதியும் யூசர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில் வழக்கமான முறையில் 9 ரூபாய் முதல் முதலீடு செய்து, பெரிய அளவிலான சேமிப்புகளை ஒருவர் உருவாக்கலாம்.
Paytm கோல்டில் எப்படி முதலீடு செய்வது?
- Paytm அப்ளிகேஷனை திறந்து அதில் ‘Paytm கோல்ட்’ அல்லது ‘டெய்லி கோல்ட் SIP’ என்று தேடுங்கள்.
- ’பை மோர்’ என்பதை கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பமான முதலீடு தொகையை என்டர் செய்யவும். (குறைந்தபட்சம் 9 ரூபாய்)
- GST உட்பட தற்போதைய தங்க விலையை தெரிந்து கொள்ளுங்கள்.
- ஒருமுறை முதலீடு அல்லது SIP ஆப்ஷன் இடையே ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும் (தினசரி, வாரவாரம் அல்லது மாதவாரியாக).
- அடுத்ததாக ஒரு பேமெண்ட் முறையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் – UPI, நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு போன்ற ஆப்ஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
- நீங்கள் வாங்கிய தங்கம் பாதுகாப்பான வாலட்டுகளில் சேமிக்கப்படும். மேலும் இது சம்பந்தமாக உங்களுக்கு SMS மற்றும் இமெயில் அனுப்பப்படும்.
இந்த திட்டம் மூலமாக டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க வேண்டும் என்ற பாரம்பரியம் உங்களிடமிருந்தால் இந்த டிஜிட்டல் கோல்டு ஆப்ஷன் உங்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும்.
April 26, 2025 7:43 AM IST


