• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold: அந்தர் பல்டி அடித்த மக்கள்.. 22 கேரட் வேண்டாம், 18 கேரட் தான் வேணும்..!! | No More 22K Only dominance – Why Indian Gold Buyers Are Rapidly Shifting to 18-Karat and Lightweight Jewellery

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold: அந்தர் பல்டி அடித்த மக்கள்.. 22 கேரட் வேண்டாம், 18 கேரட் தான் வேணும்..!! | No More 22K Only dominance – Why Indian Gold Buyers Are Rapidly Shifting to 18-Karat and Lightweight Jewellery
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold: அந்தர் பல்டி அடித்த மக்கள்.. 22 கேரட் வேண்டாம், 18 கேரட் தான் வேணும்..!!

தங்க நகை வாங்குவோர் 22 கேரட் துய்மையில் சிறு குறைப்பாடு இருந்தாலும் ஏற்றுக்கொள்ளாத மக்கள் தற்போது தங்கம் விலை உயர்வால் அந்தர் பல்டி அடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கடந்த 2 வருடங்களாக தங்கம் விலை உயர்வு காரணமாக நகை விற்பனையில் பல மாற்றங்கள் நடந்துள்ளது, இதில் முக்கியமாக 18 கேரட் தங்க நகைகள். அமெரிக்கா, சீனா, ஐரோப்பில் 18 கேரட், 14 கேரட் தங்க நகைகள் பல காலமாக இருந்து வருகிறது.

Gold: அந்தர் பல்டி அடித்த மக்கள்.. 22 கேரட் வேண்டாம், 18 கேரட் தான் வேணும்..!!

இந்தியா மற்றும் இந்திய மக்கள் பொறுத்த வரையில் 22 கேரட்டுக்கு குறைவாக இருந்தால் அதை தங்க நகையாக கூட மதிக்கப்படாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது காலம் தலைகீழாக மாறியுள்ளது.

2020, அக்டோபர் 14ஆம் தேதி 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை வெறும் 4,836 ரூபாயாக இருந்த நிலையில், இன்று (2026, அக்டோபர் 14) 13,590 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 2-3 வருடத்தில் தங்கம் விலையில் ஏற்பட்ட உயர்வு மக்கள் மத்தியில் தங்களுடைய நிலைப்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.

தற்போது இந்தியா முழுவதும் 18 கேரட் தங்க நகைகள் அதிகம் வாங்கப்பட்டு வருகிறது, இதற்கான துவக்க காலமாக இந்த பண்டிகை சீசன் விளங்குகிறது. இதுக்குறித்து டாடா குழுமத்தின் தானிஷ்க் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான அருண் நாராயண் கூறுகையில், 22 கேரட் நகைகள் வாங்கம் இடத்தில் 18 கேரட் நகைகள் வாங்கும் போது விலை சுமை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் மக்கள் 18 கேரட் நகைகளை அதிகம் வாங்க துவங்கியுள்ளனர்.

இன்னும் சில வாடிக்கையாளர்கள் 14 கேரட் தங்கத்தில் வைரம் பதித்த நகைகளை வாங்க துவங்கியுள்ளனர் என அருண் தெரிவித்தார்.

இந்திய மக்களுக்கு தங்கம் மீதான ஆர்வம் எந்த காலத்திலும் குறையாத நிலையில், மக்கள் தங்கம் வாங்கும் போது மாற்று வழிகளை தீவிரமாக ஆய்வு செய்து முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

மேலும் 22 கேரடுக்கு இருக்கும் ரீசேல் வேல்யூ 18 கேரட் நகைகளுக்கும் இருக்கும் காரணத்தாலும், பெரும்பாலான வங்கிகள் BIS ஹால்மார்க் கொண்ட 18 கேரட் நகைகளை தங்க கடனுக்காக எடுத்துக்கொண்டு வருவதாலும் மக்கள் மத்தியில் இத்தகைய மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

இதேபோல் நகை கடைக்கு வரும் முன்பே கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆஃபர், கிஃப்ட் கார்டு ஆஃபர், ஆன்லைன் தங்க நாணய ஷாப்பிங்-ல் இருக்கும் ஆஃபர், பழைய தங்கத்தை மாற்றுவது போன்ற அனைத்து விபரங்களையும் தெரிந்துக்கொண்டு தான் வருகிறார்கள்.

தள்ளுபடி, ஆஃப்ரகள் குறித்து மக்கள் அதிகளவில் ஆன்லைனில் ஆய்வு செய்து அதன் பின்பே கடைக்கு வருகிறார்கள் எனவும் அருண் நாராயண் தெரிவித்துள்ளார்.

மக்கள் விருப்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் தனிஷ்க் போன்ற பல நகை பிரபமலான நகை கடைகள் தற்போது 18 கேரட் நகைகள், லைட் வெயிட் நகைகள், 14 கேரட் தங்கம் + வைரம் நகைகள் பிரிவை விரிவாக்கம் செய்துள்ளத.

தங்கம் விலை உயர்வு காரணமாக மக்கள் மத்தியில் வைர நகைகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது, Lab grown diamond வருகை அதிகரிப்பின் மூலம் இயற்கையாக வைரத்தின் மதிப்பு பெரியளவில் குறைந்திருக்கும் வேளையில் மக்கள் வைர நகைகளை அதிகம் வாங்க துவங்கியுள்ளனர். இதனால் இந்தியாவின் வைரம் மற்றும் வைர நகை துறை வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

No More 22K Only dominance – Why Indian Gold Buyers Are Rapidly Shifting to 18-Karat and Lightweight Jewellery

No More 22K Only dominance – Why Indian Gold Buyers Are Rapidly Shifting to 18-Karat and Lightweight Jewellery — Gold: அந்தர் பல்டி அடித்த மக்கள்.. 22 கேரட் வேண்டாம், 18 கேரட் தான் வேணும்..!!

Story first published: Wednesday, October 14, 2026, 13:31 [IST]

Other articles published on Oct 14, 2026

Read More

Previous Post

ரத்தன் டாடா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? வெடிக்கும் போட்டி.. நீதிமன்றத்தை நாடிய நோயல் டாடா | Tata Trusts issue continuous: Noel Tata and Son Neville File Caveat Petitions in Bombay High Court

Next Post

சவுதி அரேபியா: இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து… | Makkal Osai

Next Post
சவுதி அரேபியா: இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து… | Makkal Osai

சவுதி அரேபியா: இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin