சிங்கப்பூர் பொதுத்தேர்தல் GE2025: சிங்கப்பூரில் நீண்டகாலமாக ஆளும் மக்கள் செயல் கட்சி (PAP) நேற்று (மே 3) சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
இதன்மூலம் PAP கட்சி சிங்கப்பூரில் தொடர்ச்சியாக 14வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
Singapore Pools டோட்டோ கடையை மூட முடியுமா? PAP-க்கு சவால் விட்ட வேட்பாளர்
1959 முதல் ஆட்சியில் இருக்கும் PAP கட்சி, 65.6 சதவீத வாக்குகளுடன் 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களைப் பெற்றுள்ளது, கடந்த 2020 பொதுத்தேர்தலில் அது 61.2 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. தற்போது கிட்டத்தட்ட 4 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது.
பொதுத் தேர்தலில் PAP வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் லாரன்ஸ் வோங் வாக்காளர்களின் இந்த உறுதியான ஆதரவிற்கு நன்றியை தெரிவித்தார்.
X தளத்தில் தனது நன்றியை பகிர்ந்துகொண்ட திரு. வோங்; சிங்கப்பூர் மக்கள் PAP கட்சி ஆட்சி செய்யவேண்டும் என்ற தெளிவான மற்றும் வலுவான அதிகாரத்தை வழங்கியுள்ளதாக கூறினார். மேலும், எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றியுடன் இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான “புதிய எஸ் பாஸ் (S Pass) அனுமதிகளை நிறுத்த வேண்டும்” – PAR அறிக்கை
இந்த 2025 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சுமார் 2.63 மில்லியன் சிங்கப்பூர் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியை பெற்றிருந்தனர். அதில் சுமார் 92.47 சதவீத பேர் வாக்களித்ததாக தேர்தல் துறை குறிப்பிட்டது.
மற்றவை கட்சிகளை பொறுத்தவரை, பாட்டாளி மக்கள் கட்சி முன்பைப்போலவே இம்முறையும் 10 இடங்களில் வெற்றிபெற்றது.
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

