GDP 7.8% வளரும் போது.. ஏன் மக்கள் தங்கம் வாங்க கூடாது.. மோடி-யின் பார்முலாவை விளக்கும் Zoho ஸ்ரீதர் வேம்பு!
இந்திய பொருளாதாரம் 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 7.8% வளர்ச்சி கண்டுள்ளதை பெருமையுடன் கூறப்படும் நிலையில், தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாட்டுப் பயணத்தை குறைத்துக்கொள்ளுங்கள், வெளிநாட்டில் திருமணம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறியது ஏன் என்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது.
இந்த கேள்விக்கு சென்னையை தலைமையிடமாக கொண்டு உலரம் முழுவதும் செயல்படும் Zoho நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு பொருளாதார ரீதியான விளக்கத்தை தனது டிவிட்டர் பதிவின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் டாலர் அல்லாத நாணயத்தை பயன்படுத்தும் நாடுகள் பொரருளாதாரத்தில் வேகமாக வளர்ந்தாலும், தங்களுடைய இறக்குமதி வர்த்தகத்திற்காகவும், நாணய மதிப்பை கட்டுப்படுத்த அன்னிய செலாவணியை நிலையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என ஸ்ரீதர் வேம்பு தனது பதிவை துவங்குகிறார்.
இந்திய வேகமாக வளரும்போது தொழிற்சாலைகள், கட்டுமானம், தொழில்நுட்பம் என பல துறைகளுக்கு அடிப்படையாக இருக்கும் எனர்ஜி அதாவது மின்சாரம், எரிவாயு, எரிபொருள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகமாகவே உள்ளது. இதில் பெரும்பாலான தேவைகளை நாம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம்.
அதாவது, பொருளாதாரம் வேகமாக வளர்வதாலும் இறக்குமதி செலவுகள் அதிகரித்தால் செலாவணி இருப்பை மேம்படுத்துவது அவசியம் என கூறுகிறார் ஸ்ரீதர் வேம்பு.
இறக்குமதி மூலம் ஏற்படும் அன்னிய செலவாணியை சமாளிக்க இந்தியா ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது தான் ஓரே வழி. இல்லையெனில் இறக்குமதியை சார்ந்து இல்லாமல் அனைத்து சேவைகள், தொழில்நுட்பங்களுக்கு சொந்தமாக தயாரித்து தன்னிறைவு பெற வேண்டும்.
தற்போது இந்தியாவின் ஏற்றுமதி வளர்ந்து வந்தாலும், அந்த ஏற்றுமதி பொருட்களை தயாரிப்பதற்கு வெளிநாட்டிலிருந்து நவீன இயந்திரங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், பொருட்கள் தேவைப்படுகிறது. உதாரகணமாக ஐபோன் தயாரிக்க உதிரிபாங்கள், தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதில் துவங்தி. ஐடி மற்றும் டெக் சேவைகளுக்கு தேவையான CPU, GPU, சாப்ட்வேர் உள்ளிட்டவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் தான் இன்னமும் இந்தியாவில் இருந்து வருகிறது.
இதனால், ஏற்றுமதி மூலம் குறிப்பிடத்தக்க அளவிலான வெளிநாட்டு செலாவணி வந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் எரிசக்திக்கான இறக்குமதி செலவுகளும் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இந்தியா தொடர்ந்து இறக்குமதி நாடாகவே இருந்து வருகிறது, அன்னிய செலவாணி குறித்த அச்சம் இந்தியா ஏற்றுமதி உபரி நாடாக மாறும் போது குறையும்.
உதாரணமாக ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற டாலர் அல்லாத நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்த காலத்திலும் வெளிநாட்டு செலாவணியை மிகவும் கடினமான கட்டுப்பாடுகள் உடன் தான் அந்த நாடுகள் நிர்வாகம் செய்து வந்து.
இந்த நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்ப திறனை அடையவும், வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்து இருப்பதையும் குறைக்க பல ஆண்டுகள் தேவைப்பட்டது. இந்தியாவும் தற்போது இத்தகைய காலக்கட்டத்தில் தான் உள்ளது என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
இந்தியாவும் தற்போது இதுபோன்ற ஒரு மாற்றக் கட்டத்தில் இருப்பதாகவே வேம்புவின் விளக்கம் அமைந்துள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவுக்கு இணையான தொழில்நுட்ப திறனை வளர்த்துக் கொண்டு, வெளிநாட்டு இறக்குமதி சார்பை குறைத்துக்கொண்டால் அன்னிய செலாவணியை பாதுகாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை இருக்காது என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
அன்னிய செலாவணியை இருப்பை பாதுகாக்கவும், மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தான் பிரதமர் நாட்டு மக்களை தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாட்டுப் பயணத்தை குறைத்துக்கொள்ளுங்கள், வெளிநாட்டில் திருமணம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார் என ஸ்ரீதர் வேம்பு தனது பதிவின் வாயிலிாக விளக்கம் கொடுத்தார். இவருடைய பதிவை இதுவரையில் சுமார் 4 லட்சம் பேர் பார்த்தனர்.

