எனவே, இந்த கேஸ் இணைப்புகள் வழங்குவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக, நகர விநியோகஸ்தர்களுக்கு தற்போது மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஊக்கத்தொகை சார்ந்த சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது. அதன்படி, புதிதாக வழங்கப்படும் ஒவ்வொரு வீட்டு குழாய்வழி கேஸ் சிலிண்டருக்கும், நகர எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு கூடுதலாக 200 ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் குறைந்த விலையிலான வீட்டு உபயோக இயற்கை எரிவாயுவை அரசு கூடுதலாக வழங்கும்.
