மணிகண்ட்ரோல் தகவலின்படி, இண்டேன் (Indane) அதன் டீலர்களுக்கு அனுப்பிய செய்தியில் இதுகுறித்து விவரித்துள்ளது. அதன்படி, முன் எப்போதும் இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும், மேலே குறிப்பிட்டபடி எங்கள் ஐவிஆர்எஸ் மற்றும் மிஸ்டு கால் எண்களுக்கு வரும் முன்பதிவு அழைப்புகளின் எண்ணிக்கை இயல்பை விட 8-10 மடங்கு அதிகரித்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அழைப்புகளைச் செய்ய முயற்சிக்கும் கோடிக்கணக்கான பயனர்களால், தொலைத்தொடர்பு நெட்வொர்க்கின் சுமை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, தொலைபேசி இணைப்புகள் இணைக்கப்படவில்லை. மேலும், இணைக்கப்பட்டாலும் முன்பதிவுகள் முடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

