• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

G.P.Muthu: என்னாது மாந்த்ரீக பூஜையா? டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து மீது வழக்குப் பதிவு! | Police files case against case agianst G.P.Muthu

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
G.P.Muthu: என்னாது மாந்த்ரீக பூஜையா? டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து மீது வழக்குப் பதிவு! | Police files case against case agianst G.P.Muthu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Published: Saturday, August 1, 2026, 14:10 [IST]

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உடன்குடியில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் உடன்குடி பஜாரில் நகை பட்டறை தொழில் வைத்து நடத்தி வருகிறார்.

GP Muthu

ஊரில் உள்ள உச்சிமாகாளி அம்மன், பட்டறை அம்மன் கோவில் கமிட்டி தலைவராகவும் உள்ளார்‌. மேலும், அந்த கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தை பயன்படுத்துவது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து என்பவருக்கும் ஊர் மக்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.

யூடியூபர் ஜி.பி.முத்து வீட்டருகே நள்ளிரவில் மாந்திரீக பூஜை? நாற்காலி வீசி தாக்குதல்! CCTV-ல் ஷாக்!

யூடியூபர் ஜி.பி.முத்து வீட்டருகே நள்ளிரவில் மாந்திரீக பூஜை? நாற்காலி வீசி தாக்குதல்! CCTV-ல் ஷாக்!

இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை கொடை நடத்துவது வழக்கம். தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் கட்டுமான பணிகள் சிறப்பாக நிறைவேற வேண்டி கடந்த 19.7.2026 ம் தேதி இரவு சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.

இதில் ஊர்மக்கள் கலந்து கொண்டனர். பூஜை நடைபெற்று கொண்டிருக்கும்போது ஜிபி முத்து தனது வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை நடத்துவதாக குற்றம் சாட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு கைகலப்பாக மாறியது.

இதையடுத்து குலசேகரபட்டினம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 19/7/2026 அன்று கோவிலில் நடைபெற்ற பூஜையை, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மாந்திரீக பூஜை நடத்துவது போன்று கடந்த 29.7.2026 அன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது.

இதையடுத்து உச்சினிமாகாளி அம்மன் கோவில் கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டணம் போலீசார், ஜிபி முத்து மீது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தீய எண்ணத்துடன் மத நம்பிக்கை அவமதிக்கும் வகையில் பொம்மைகளை வைத்து மாந்திரீக பூஜை செய்ததாக சமூக வலைதளங்களில் ஊர் மக்களை அவமதிக்கும் வகையிலும், ஊர் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விஜய்யை அசிங்கப்படுத்துவதே தற்குறி ரசிகர்கள்தான்! ஜி.பி.முத்து கடும் விமர்சனம்

விஜய்யை அசிங்கப்படுத்துவதே தற்குறி ரசிகர்கள்தான்! ஜி.பி.முத்து கடும் விமர்சனம்

இந்த பிரச்சனை தொடர்பாக இந்த ஆண்டில் இதுவரை ஜிபி முத்து மீது மொத்தம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜிபி முத்து என்பவர் பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சமூகவலைதளங்களில் பிரபலமடைந்தவர். யூடியூபர், திரைப்பட நடிகராகவும் உள்ளார். இவரது இயற்பெயர் கணேசன் பேச்சிமுத்து.

இவர் ஆரம்பத்தில் மரவேலை செய்து வந்த நிலையில் டிக்டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவருக்கு வரும் கடிதங்களை இவர் வாசிப்பது நகைச்சுவையாக இருக்கும் என்பதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அது போல் இவரது தமிழ் உச்சரிப்புக்கும் ரசிகர்கள் உள்ளனர். கடிதத்தில் ரசிகர்கள் எழுதியிருக்கும் ஏடாகூட கேள்விகளுக்கு ஜிபி முத்து கோபத்துடன் அளிக்கும் பதில் காமெடியாக இருக்கும்.

Read More

Previous Post

பாதுகாப்பு வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்! உக்ரைனை தாக்கிய ரஷ்யாவின் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள்

Next Post

Solar Panel | ரூ.9,000-க்கு சோலார் பேனல் அமைக்கலாம்.. மின் கட்டணம் இல்லை.. அரசு மிகப்பெரிய மானியம்!

Next Post
Solar Panel | ரூ.9,000-க்கு சோலார் பேனல் அமைக்கலாம்.. மின் கட்டணம் இல்லை.. அரசு மிகப்பெரிய மானியம்!

Solar Panel | ரூ.9,000-க்கு சோலார் பேனல் அமைக்கலாம்.. மின் கட்டணம் இல்லை.. அரசு மிகப்பெரிய மானியம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin