Last Updated:
Freedom Chicken: இந்த கோழிகளைப் பொதுமக்களுக்கு விற்பனைக்கும், சிறைவாசிகள் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகள் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் நல்ல தொழில் தொடங்க உதவும் வகையில் சிறையில் கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் முதன்முதலில் கோவையில் துவங்கப்பட்டது. சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணித் துறை தலைமை இயக்குநர் Dr. மகேஷ்வர் தயாள் மேற்கொண்ட முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுக்கான செலவைக் கட்டுப்படுத்தி சிறைச்சாலையில் இருக்கும் சிறைக் கைதிகளுக்கு மறுவாழ்விற்காக ஒரு வேலை வாய்ப்பினைக் கொடுத்திடவும் அனைத்துச் சிறைகளிலும் கோழிப் பண்ணை அமைத்து அதில் வரும் கோழிகளைச் சிறைவாசிகளுக்கும் பொதுமக்களுக்கும் கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் அனைத்துச் சிறைகளிலும் இந்த கோழிப் பண்ணை அமைக்கும் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கோழிகளைப் பொதுமக்களுக்கு விற்பனைக்கும், சிறைவாசிகள் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோழிகளை மக்களுக்கு விற்பனை செய்வது மற்ற இடங்களில் விற்பனை ஆகும் விலையை விட ஒரு கிலோவிற்கு 30 முதல் 40 ரூபாய் குறைவாகவே விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த கோழிப் பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு எந்த ஒரு மருந்தும் கொடுக்காமல் ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டால் அந்த கோழிகளுக்கு இயற்கை முறையில் மட்டுமே கோழிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருந்து கொடுக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டாலும் மனித உடலுக்கு ஒத்துப்போகும் மருந்துகளை மட்டுமே கோழிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற இடங்களின் கோழிகளை விட இந்த கோழிகளின் தரம் அதிகரிக்கிறது.
இங்கு மொத்தம் 5000 கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும், கோவை பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள சிறை வளாகத்தில் FREEDOM CHICKEN என்ற பெயரில் கடை அமைத்து பொதுமக்களுக்குக் கோழிக்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வாரம் இரண்டு முறை புதன் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறை வாசிகளுக்கும் இந்த கோழிகள் உணவாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Maasi Karuvadu: மருத்துவப் பலன் நிறைந்த மாசி கருவாடு… 10 நாள் உழைப்பு… மாசி கருவாடு தயாரிக்கும் முறை…
இந்த கோழி பண்ணை கடந்த 28.12.2024 அன்று கோவை மத்தியச் சிறையில் ஆரம்பிக்கப்பட்டது. நன்கு ஆராய்ந்து, நோய்கள் தாக்காத தாய் கோழிகளின் குஞ்சுகளைத் தேர்வு செய்தது இங்கு வளர்த்து வருகிறோம். இன்று வரையிலும் 5000 கோழிகளுக்குக் குறையாமல் இருக்கிறது. இந்த FREEDOM CHICKEN பிப்ரவரி முதல் வாரம் முதல் இயங்கி வருகிறது.
இந்த ஃப்ரீடம் சிக்கன் கடையில் வார நாட்களில் 15 முதல் 20 கிலோவிற்குக் குறையாமல் விற்பனையாகி வருகிறது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனை 100 கிலோவைத் தொட்டு விடுகிறது எனச் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
March 03, 2025 12:05 PM IST

