Last Updated:
சூப்பர் மார்க்கெட்கள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏசி வாங்க நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
ஃபிரான்சில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில், மலிவு விலையிலான ஏர் கண்டிஷனர்கள், மின்விசிறிகளை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்களில் மக்கள் முண்டியடித்ததால் மோதல் வெடித்தது.
பிரான்சின் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனமான லிட்ல், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மின்விசிறிகளுக்கு அதிரடி விலைக் குறைப்பு சலுகைகளை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தள்ளுபடி விலையில் ஏசிகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சூப்பர் மார்க்கெட்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
Fights are breaking out in stores across #France as customer scramble to buy fans and air conditioners during the country’s extreme heat wave. Over half the country is under red alerts, with temperatures exceeding 40°C in places. pic.twitter.com/m3NkMLfYmc
— Ian Collins (@Ian_Collins_03) June 27, 2026
பல இடங்களில் சூப்பர் மார்க்கெட்கள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். கடைகள் திறக்கப்பட்டவுடன், சலுகை விலை ஏசிகளை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குவதற்காக மக்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதால் கூச்சலும் குழப்பமும் தள்ளுமுள்ளும் நிலவியது. தலைநகர் பாரிஸில் சூப்பர் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு இடையே மோதலும் வெடித்தது. பாரிஸின் புறநகர் பகுதியான நான்டெரேவில் சூப்பர் மார்க்கெட்டில், கடையின் முன் பக்க நுழைவாயில் கதவு உடைந்து நொறுங்கியது.


