Last Updated:
Fish Fry Business: பூம்புகார் கடற்கரையில் விதவிதமாய் மீன் பொறித்து விற்பனை செய்துவரும் இந்த பெண்கள் அதன் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
காவிரிப்பூம்பட்டினம் என்று அழைக்கப்படும் பூம்புகார் ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்த பூம்புகாருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி சாப்பிடுவது இங்கு விற்கப்படும் சுவையான மீன் வகைகள் தான். அந்த வகையில் சுவையான மீன்களை பூம்புகார் கடற்கரையில் இயங்கி வருவது தான் டால்பின் மீன் உணவகம்.
இந்த பூம்புகார் கடற்கரையில் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த டால்பின் என்ற மீன் உணவகத்தை ஆறு பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். தங்களது பொருளாதாரத் தேவைக்காகவும், சமூகத்தில் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியத்துடனும் தங்களது சொந்த முயற்சியில் கடையைத் தொடங்கிய இவர்கள் தற்போது இந்த மீன் உணவகம் மூலம் மாதம் ரூ.1.5 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இது குறித்து டால்பின் குழு பெண்கள் கூறுகையில், “இந்த உணவகம் தொடங்குவதற்கு முன்பாக சிறிய ஹோட்டல் ஒன்று நடத்தி வந்தோம். மகளிர் குழுவில் உறுப்பினர்களாக இருந்த நாங்கள் ஆறு பெண்களாகச் சேர்ந்து இந்த டால்பின் உணவகத்தை ஆரம்பிக்க முடிவெடுத்து தற்போது நடத்தி வருகிறோம்.
இதையும் படிங்க: Thoothukudi Night Club: ஊர்ல எங்க பாத்தாலும் நைட் கிளப் தான்… சிறியவர் முதல் பெரியவர் வரை இதான் ஃபேவரைட்…
எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பெண்களாகச் சேர்ந்து சாதிக்க வேண்டும், நாங்களும் தொழில் முனைவராக இருக்க வேண்டும் என இந்த கடையை நடத்தி வருகிறோம். இந்த உணவகம் காலை 12 மணிக்குத் திறக்கப்பட்டு, இரவு 9 மணி வரை இருக்கும்.
திங்கள் முதல் வெள்ளி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் வியாபாரமும் அவ்வளவாக இருக்காது. ஆனால் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ரூ.15,000 முதலீடு போட்டால் ரூ 40,000 வரை வருமானம் வரும்.
எங்கள் கடையில் மீன் சுவையாக இருக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் நல்ல ஆதரவு தருகின்றனர். குறிப்பாக நாங்கள் ஆறு பெண்களும் ஒன்றாக வேலை பார்ப்பது பெண்களால் அனைத்தும் செய்ய முடியும் என்றும், சுதந்திர பெண்களாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த டால்பின் மீன் உணவகத்தை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Mayiladuthurai,Nagapattinam,Tamil Nadu
February 01, 2025 5:41 PM IST
Fish Fry Business: மீன் விற்பனையில் ரூ.1.50 லட்சம் வரை வருமானம்… கடற்கரையில் கடை போட்டு அசத்தும் பெண்கள்…

