இதற்கு நேர்மாறாக, தங்களின் கோல் பகுதியைத் தற்காத்து விளையாடும் அணியின் (தடுக்கும் அணியின்) வீரர்களின் மீதோ அல்லது காலிலோ பட்டு பந்து அவர்களது சொந்த எல்லைக்கோட்டைத் தாண்டி (கோல் கம்பத்திற்கு வெளியே) சென்றால், எதிரணிக்கு ‘கார்னர் கிக்’ வழங்கப்படும். இது பந்தை வெளியேற்றிய தடுக்கும் அணிக்கு ஒரு தண்டனையாகவும், தாக்கும் அணிக்கு கோல் அடிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமையும் இந்த முறையில், எந்தப் பக்கமாக பந்து வெளியே சென்றதோ, அந்தப் பக்கத்தில் உள்ள மைதானத்தின் மூலைப்பகுதியில் (Corner) பந்தை வைத்துத் தாக்கும் அணி உதைத்து ஆட்டத்தைத் தொடங்கும். சுருங்க சொன்னால், தாக்கும் அணி பந்தை வெளியே அடித்தால், தடுக்கும் அணிக்கு கோல் கிக் கிடைக்கும். அதுவே, தடுக்கும் அணி பந்தை வெளியே அடித்தால், தாக்கும் அணிக்கு கார்னர் கிக் கிடைக்கும்.

