சுவரமைத்து நிற்கும் வீரர்கள் பந்தைத் தடுக்கலாமா? நிச்சயமாகத் தடுக்கலாம். விதிகளின்படி, ஆடுகளத்தில் ஒரு வீரர் பந்தை கால்களால் உதைத்தோ, மார்பால் அல்லது வயிற்றால் தடுத்தோ, தலையால் இடித்துத் தள்ளியோ தடுக்கலாம். எனவே, சுவரில் நிற்கும் வீரர்கள் தாங்கள் நின்றுகொண்டே தங்கள் உடல், தலை, மார்பு அல்லது கால்களைப் பயன்படுத்தி அந்தப் பந்தைத் தடுத்து நிறுத்த முழு உரிமையும் உண்டு. ஆனால், பந்தைக் கையால் தொடுவதும், பிடிப்பதும், எறிவதும், தடுத்து நிறுத்துவதும் தண்டனைக்குரிய மிகப்பெரிய குற்றங்களாகும்.


