அடிக்கடி வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்காமல், கடந்த 5 ஆண்டுகளாக முக்கிய வீரர்களைக் கொண்ட ஒரு நிலையான அணியை அவர் தகவமைத்தார். விளைவு ஆப்பிரிக்க மண்டலத்திற்கான (CAF) உலகக் கோப்பை தகுதிச் சுற்றில், ‘டி’ பிரிவின் (Group D) கீழ் முதலிடம் பிடித்து, உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்குத் (World Cup Finals) தகுதி பெற்று மாஸ் காட்டியுள்ளது கேப் வெர்டே. கேமரூன், லிபியா, அங்கோலா, ஈஸ்வதினி மற்றும் மொரிஷியஸ் ஆகிய பலம் வாய்ந்த நாடுகள் இடம்பெற்றிருந்த அந்தப் பிரிவில், 23 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு முன்னேறியுள்ளது.


