பெரும்பாலான வங்கிகளில் குறுகிய கால அளவுக்கு குறைவான வட்டி விகிதம் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அதே நேரத்தில் நீண்ட கால அளவுக்கு அதிக வட்டி விகிதங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் 5- வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.5% வட்டி வழங்குகிறது. அதே நேரத்தில் ஒரு வருடத்திற்கு 6.8% வட்டியை வழங்குகிறது. ஃபிக்சட் டெபாசிட் கணக்கை திறக்கும் சமயத்தில் எல்லா முதலீட்டாளர்களும் அதிக வட்டி விகிதத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அதனை ஆரம்பிப்பார்கள். வட்டி விகிதமானது ஒவ்வொரு வங்கியை பொறுத்து மட்டுமே மாறுபடாமல் கால அளவை பொருத்தும் வேறுபடுகிறது.
உதாரணமாக நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 3 மாத ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 5.5% வட்டியும், இதுவே நீங்கள் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 6.8 சதவீத வட்டியும் வழங்கப்படும். இந்த பதிவில் 5- வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்:
SBI:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 5- வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.5% வட்டியையும், அதே நேரத்தில் குறைவான கால அளவு கொண்ட 1- வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.8% வட்டியையும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் அமலானது.
ICICI வங்கி:
இந்த தனியார் வங்கி 5- வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7 சதவீத வட்டியையும், ஒரு வருட குறுகிய கால ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.7% வட்டியையும் கொடுக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
HDFC வங்கி:
மிகப்பெரிய தனியார் வங்கியாக திகழும் HDFC வங்கி 5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டியையும், 1- வருட குறுகிய கால ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.6% வட்டியையும் கொடுக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் பிப்ரவரி 9, 2024 முதல் அமலானது.
பேங்க் ஆஃப் பரோடா (BOB):
இந்த பொதுத்துறை வங்கி 5- வருட கால ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.50 சதவீத வட்டியையும், 1- வருட கால ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.85% வட்டியையும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜனவரி 15, 2024 முதல் அமலுக்கு வந்தது.
கோட்டக் மஹிந்திரா வங்கி:
இந்த வங்கி 5- வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.20% வட்டியையும், அதுவே 1- வருட கால ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.10 சதவீத வட்டியையும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் பிப்ரவரி 27, 2024 அமல்படுத்தப்பட்டது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB):
அரசுக்கு சொந்தமான இந்த வங்கி 5- வருட கால ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.55 சதவீத வட்டியையும், ஒரு வருட கால குறுகிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.8% வட்டியையும் கொடுத்து வருகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 12, 2024 முதல் அமலுக்கு வந்தது.
.
&w=750&resize=750,375&ssl=1)
