Last Updated:
உங்களுடைய மொத்த தொகையையும் ஒரே நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
ஃபிக்சட் டெபாசிட்கள் என்பது சேமிக்க நினைக்கும் இந்தியர்களிடையே பிரபலமான மற்றும் நம்பிக்கையான ஒரு முதலீட்டு ஆப்ஷனாக இருந்து வருகிறது. புத்திசாலித்தனமாக திட்டமிட்டால் ஃபிக்சட் டெபாசிட்கள் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் ரிட்டன்களை நிச்சயமாக மேம்படுத்தலாம்.
அதோடு வரி சுமையும் நிச்சயமாக குறையும். சரியான கால அளவு, டெபாசிட்களை புத்திசாலித்தனமாக பிரித்து முதலீடு செய்வது, வட்டித் தொகையை மறுமுதலீடு செய்வது மற்றும் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதன் மூலமாக அடிப்படை ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை உங்களால் பயனுள்ள செல்வ உருவாக்க திட்டமாக மாற்ற முடியும். நீங்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் அதிகபட்ச ரிட்டன்களை பெறுவதற்கு உதவும் சில யுக்திகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களுடைய FD கால அளவு என்பது உங்கள் முதலீட்டில் இருந்து நீங்கள் எவ்வளவு ரிட்டன்களை சம்பாதிக்கலாம் என்பதை முடிவு செய்கிறது. குறுகிய கால டெபாசிட்கள் பணப்புழக்கத்தை வழங்கினாலும் நீண்ட கால FDகள் வழக்கமாக அதிக வட்டி விகிதங்களை கொடுக்கிறது. எனவே மொத்த ரிட்டன்களில் எந்த ஒரு சமரசமும் செய்யாமல் இருப்பதற்கு குறுகிய, மிதமான மற்றும் நீண்ட கால FDகளில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளுங்கள்.
பிரித்து முதலீடு செய்யும் யுக்தி: உங்களுடைய முதலீடுகளை வெவ்வேறு மெச்சூரிட்டி கொண்ட பல்வேறு டெபாசிட்களில் பங்கீடு செய்வதை கருத்தில் கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்களுடைய பணத்தின் ஒரு பகுதி ஒவ்வொரு வருடமும் மெச்சூரிட்டியாகி பணப்புழக்கத்தை கொடுத்து மீண்டும் முதலீடு செய்வதற்கான அபாயத்தையும் குறைக்கிறது. வட்டி விகிதங்கள் உயர்ந்தாலும் அல்லது குறைந்தாலும் இந்த முறை அதற்கான தாக்கத்தை பரவலாக்கி, உங்களுக்கு நிலையான ரிட்டன்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்) எக்கச்சக்கமான ஃபிக்சட் டெபாசிட் ஆப்ஷன்களை வழங்குகின்றன. எனவே ஒரே கால அளவிற்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள். 0.5 சதவீத அதிகரிப்பு கூட காலப்போக்கில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
மெச்சூரிட்டி என்பது உங்களுக்கு கிடைக்கும் வட்டியை வித்டிரா செய்யாமல் மீண்டும் புதிய FD ஆக மறு முதலீடு செய்வது கூட்டு வட்டி முறையை விரிவுபடுத்தும். அடுத்த சில வருடங்களில் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகி நீங்கள் எதிர்பார்த்த வட்டி விகிதங்களை பெறலாம்.
பொதுவாக 5- வருட வரி சேமிப்பு FDகள் வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C இன் கீழ் கழிவுத்தொகைகளை வழங்குகின்றன. இது உங்களுக்கு பாதுகாப்பு மற்றும் வரி சலுகைகள் ஆகிய இரண்டையும் தருகிறது.
உங்களுடைய மொத்த தொகையையும் ஒரே நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. பல்வேறு வங்கிகளில் வெவ்வேறு FDகளில் முதலீடு செய்வது அபாயத்தை குறைத்து, டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் காரன்டி கார்ப்பரேஷன் வழங்கும் 5 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட இன்சூரன்ஸ் காப்பீட்டை பெறுவதற்கான வாய்ப்பையும் உறுதி செய்கிறது.
பெரும்பாலான வங்கிகள் தற்போது அப்ளிகேஷன்கள் அல்லது ஆன்லைன் பேங்கிங் மூலமாக திறக்கப்படும் டிஜிட்டல் FDகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இவை நேரத்தை சேமித்து உங்களுடைய அனைத்து டெபாசிட்களையும் எளிதாக கண்காணிக்கவும், ஆவணங்கள் இல்லாமல், உடனடி ரின்யூவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இளம் முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் FDகள் என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆப்ஷனாக மாறி வருகிறது.


