• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

FD-யில் முதலீடு செய்யும் ஐடியா இருக்கா… எந்தெந்த வங்கி எவ்வளவு வட்டி தராங்கன்னு தெரிஞ்சுக்கோங்க!!!

GenevaTimes by GenevaTimes
June 5, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
FD-யில் முதலீடு செய்யும் ஐடியா இருக்கா… எந்தெந்த வங்கி எவ்வளவு வட்டி தராங்கன்னு தெரிஞ்சுக்கோங்க!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஃபிக்சட் டெபாசிட் (FD)என்பது இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். சந்தையுடன் தொடர்பில்லாத உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் ஒரு அற்புதமான முதலீட்டு ஆப்ஷனாக திகழ்கிறது.

பெரும்பாலான நபர்கள் ஃபிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்ய விரும்புவதால் பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) எக்கச்சக்கமான FD திட்டங்களை வழங்குகின்றன.

பொதுவாக ஃபிக்சட் டெபாசிட் கள் மெச்சூரிட்டியின் பொழுது முதலீட்டாளர்களுக்கு அதற்கான வட்டியை வழங்குகிறது. மேலும் 5-வருட FD போன்றவை வருமான வரி சட்டம், 1961 இல் உள்ள பிரிவு 80C -இன் கீழ் முதலீட்டாளர்களுக்கு வரி பலன்களை வழங்குகிறது.

விளம்பரம்
OTT-யில் இந்த வாரம் வெளியான புது படங்களின் லிஸ்ட்… மிஸ் பண்ணாம பாருங்க


OTT-யில் இந்த வாரம் வெளியான புது படங்களின் லிஸ்ட்… மிஸ் பண்ணாம பாருங்க

வங்கிகள் மற்றும் NBFCகள் பல்வேறு கால அளவுகள் மற்றும் தொகைகள் கொண்ட ஃபிக்சட் டெபாசிட் ஆப்ஷன்களை வழங்குகின்றன. அந்த வகையில் முன்னணி அரசு மற்றும் தனியார் வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB), பேங்க் ஆஃப் பரோடா (BoB), இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்றவை ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

விளம்பரம்

ஆக்சிஸ் வங்கி

17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு ஆக்சிஸ் வங்கி 7.20 சதவீத வட்டியை வழங்குகிறது. இதுவே 1-வருட திட்டத்திற்கு 6.70%, 2-வருட திட்டத்திற்கு 7.10 சதவீதமும், 5-வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டியும் இந்த வங்கியில் கிடைக்கிறது.

HDFC வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக திகழும் HDFC வங்கியில் 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% வட்டி கிடைக்கிறது. ஒரு வருட திட்டத்திற்கு 6.60% வட்டியும், 3 வருடம் மற்றும் 5 வருட திட்டங்களுக்கு 7 சதவீத வட்டியும் கிடைக்கிறது.

விளம்பரம்

ICICI வங்கி

இந்த வங்கியில் 15 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான FD திட்டத்திற்கு 7.20% வட்டி கிடைக்கிறது. இதுவே 1- வருட திட்டத்திற்கு 6.70% வட்டியும், 3-வருடம் மற்றும் 5-வருட திட்டத்திற்கு 7 சதவீத வட்டியும் கிடைக்கிறது.

பேங்க் ஆஃப் பரோடா

BoB 2 வருடங்கள் முதல் 3 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. ஒரு வருட திட்டத்திற்கு 6.85 சதவீதமும், 3-வருடம் மற்றும் 5-வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% மற்றும் 6.50 சதவீதம் முறையே வழங்கப்படுகிறது.

விளம்பரம்

பஞ்சாப் நேஷனல் வங்கி

PNB அதன் 400 நாள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% வட்டியை வழங்குகிறது. 1-வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.75% வட்டியும், 3-வருடம் மற்றும் 5-வருட திட்டத்திற்கு 7 சதவீதம் மற்றும் 6.50 சதவீத வட்டியும் வழங்குகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

SBI அதன் 400- நாள் அமரித் காலாஷ் திட்டத்தில் 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது. 1-வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.80 சதவீதமும், 3-வருட மற்றும் 5-வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.75 சதவீதம் மற்றும் 6.50 சதவீத வட்டி கிடைக்கிறது.

விளம்பரம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்த வங்கி அதன் 444-நாள் திட்டத்திற்கு 7.30 சதவீத அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதுவே அதன் ஒரு வருட திட்டத்திற்கு 6.90%, 3-வருடம் மற்றும் 5-வருட திட்டத்திற்கு 6.50 சதவீத வட்டியையும் தருகிறது.

.

Read More

Previous Post

20 ஓவர் உலக அணியில் ஆச்சரியப்படும் வகையில் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் – கோலி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சிறுவன் விவகாரம் வேறுவிதமாக மாற்றப்படுவதாக பெற்றோர் புகார் | Makkal Osai

Next Post
வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சிறுவன் விவகாரம் வேறுவிதமாக மாற்றப்படுவதாக பெற்றோர் புகார் | Makkal Osai

வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சிறுவன் விவகாரம் வேறுவிதமாக மாற்றப்படுவதாக பெற்றோர் புகார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin