60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மத்தியில் ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் FD திட்டங்கள் பிரபலமாக உள்ளன. இதற்கு முக்கிய காரணம் FD திட்டங்களில் முதலீடு செய்தால் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்பதுடன் இந்த திட்டங்கள் பங்கு சந்தையுடன் இணைக்கப்படவில்லை.
எனவே அவை மூத்த குடிமக்களின் முதலீட்டுகளை பாதுகாப்பாக வைத்து இருப்பதோடு, அவர்களுக்கு நல்ல வட்டி விகிதங்களை வழங்குகின்றன. நாட்டிலுள்ள அனைத்து முன்னணி வங்கிகளும் FD-க்களில் முதலீடு செய்ய மூத்த குடிமக்களை ஊக்குவிக்கின்றன. பொதுமக்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட சற்று கூடுதலாக மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுவதும் அவர்களுக்கு FD-யை சிறந்த தேர்வாக வைக்கிறது. மூத்த குடிமக்கள் FD மீதான வட்டியை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என்கிற வகையில் திரும்ப பெறலாம்.
ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வது மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர செலவுகளை சமாளிக்க வழக்கமான வருமானம் அளிப்பதோடு, வயதான காலத்தில் நிதி ரீதியாக சுதந்திரமாக செயல்பட உதவும். எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட முக்கிய வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான FD மீது அதிக வட்டியை வழங்கும் சில வங்கிகள் ஆகும்.
மூத்த குடிமக்களுக்கான FD-க்களுக்கு வழங்கப்படும் அதிக வட்டி விகிதங்கள் இங்கே:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI):
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான SBI தனது 400 நாள் அமிர்த் கலாஷ் FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதன் அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பொதுமக்களுக்கு ஆண்டுக்கு 7.10% வட்டி வழங்கப்படும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரம் SBI வங்கியானது அதன் 1 ஆண்டு FD-க்கான வட்டி விகிதமாக 7.30%, 3 ஆண்டு FD-க்கு 7.25%, 5 ஆண்டு FD-க்கு 7.50% வட்டியை மூத்த குடிமக்களுக்கு வழங்குகிறது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி (PNB):
பஞ்சாப் நேஷ்னல் வங்கியானது அதன் 400 நாள் FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.75%-ஐ வழங்குகிறது. இந்த வங்கியானது அதன் 1 ஆண்டு FD திட்டத்திற்கு 7.25 சதவீதமும், 3 ஆண்டு FD திட்டத்திற்கு 7.50 சதவீதமும், அதே சமயம் 5 ஆண்டு FD திட்டத்திற்கு 7.00 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு வட்டியாக வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா (BOB):
பேங்க் ஆஃப் பரோடா அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.75 சதவீதத்தை, 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD திட்டங்களுக்கு வழங்குகிறது. மேலும் இந்த வங்கியானது அதன் ஓராண்டு FD-க்கு 7.35 சதவீதம், 3 ஆண்டு FD-க்கு 7.75 சதவீதம், 5 ஆண்டு FD-க்கு 7.15 சதவீதம் என வட்டி வழங்குகிறது.
கனரா வங்கி (Canara Bank):
இந்த வங்கி தனது 444 நாள் FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதன் அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் இந்த வங்கி தனது ஓராண்டு FD-க்கு 7.35%, மூன்றாண்டு FD-க்கு 7.30% மற்றும் ஐந்தாண்டு FD-க்கு 7.20% என்ற அளவில் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank):
இந்த வங்கி 5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள் மற்றும் 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான FD-க்களில் அதிகபட்சமாக 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது இந்த வங்கியின் 1 ஆண்டு FD-க்கான வட்டி விகிதம் 7.10%-ஆகவும், 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு FD-களுக்கான வட்டி விகிதம் 7.50%-ஆகவும் உள்ளது.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank):
இந்த வங்கி 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.75 சதவீதத்தை மூத்த குடிமக்களுக்கு வழங்குகிறது. இந்த வங்கியின் ஓராண்டு FD-க்கான வட்டி விகிதம் 7.20%-ஆகவும், 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு FD திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.50%-ஆகவும் உள்ளது.
கோட்டக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank):
இந்த வங்கி 390 நாட்கள் முதல் 23 மாதங்களுக்கும் குறைவான முதிர்வு காலம் கொண்ட FD-க்களில் 7.90% வட்டி விகிதம் வழங்குகிறது. மேலும் கோட்டக் மஹிந்திரா அதன் ஓராண்டு மற்றும் மூன்றாண்டு FD-க்களுக்கான வட்டி விகிதமாக 7.60 சதவீதத்தையும், ஐந்தாண்டு FD திட்டத்திற்கு 6.70% வட்டியையும் வழங்குகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
