• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

FD-க்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் 8 வங்கிகள்.. லிஸ்ட் இதோ..! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
FD-க்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் 8 வங்கிகள்.. லிஸ்ட் இதோ..! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தரவாதமான, ஆபத்து இல்லாத வருமானத்திற்காக FD-யில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், இது நிதி சார்ந்த இலக்குகளைத் திட்டமிடுவதை எளிதாக்குகிறது. மேலும் இவை சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. எனவே அதிக வட்டி வருமானத்தை தரும் FD திட்டங்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்தது. நீங்கள் முதலீடு செய்யும் FD திட்டத்தின் மெச்சூரிட்டி பீரியட்டை பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடும். உதாரணமாக, பொதுவாக நீண்ட கால மெச்சூரிட்டி பீரியட் கொண்ட திட்டத்தில் முதலீடு செய்தால், குறைந்த கால மெச்சூரிட்டி பீரியட் திட்டத்தில் கிடைப்பதை விட அதிக வட்டி வருமானம் கிடைக்கும்.

அதே நேரம் ஒரு வங்கி அதன் நிலையான வைப்புத்தொகைகளுக்கு (FDs) வழங்கும் அதிகபட்ச வட்டி, மிக நீண்ட கால மெச்சூரிட்டி பீரியட் கொண்ட திட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை. எளிமையாக சொல்வதென்றால் ஒரு வங்கி 4 ஆண்டு மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்கு பதிலாக, அதன் 3 ஆண்டு கால FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்க கூடும். ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வருமானத்தை வழங்கும் 8 வங்கிகளை இங்கே பார்க்கலாம்.

ஹெச்டிஎஃப்சி வங்கி:

பிரபலமான இந்த தனியார் வங்கி, 60 வயதிற்குட்பட்ட குடிமக்களுக்கு 18 முதல் 21 மாதங்கள் வரையிலான கால அவகாசம் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 6.6% என்கிற அதிகபட்ச வட்டியையும், அதே நேரம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு 7.1% வட்டியையும் வழங்குகிறது. இந்த விகிதங்கள் ஜூன் 25, 2025 அன்று அமலுக்கு வந்தன.

ஐசிஐசிஐ வங்கி:

இந்த தனியார் வங்கி 60 வயதிற்குட்பட்ட மக்களுக்கு 2 வருட கால அவகாசம் கொண்ட FD-க்கு 6.6% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.1% வட்டியையும் வழங்குகிறது.

கோடக் மஹிந்திரா வங்கி:

இந்த வங்கி 390 நாட்கள் முதல் 23 மாதங்கள் வரையிலான கால அவகாசம் கொண்ட FD திட்டத்திற்கு வழக்கமான குடிமக்களுக்கு 6.6% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.1% வட்டியையும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 20 முதல் அமலுக்கு வந்தன.

ஃபெடரல் வங்கி:

இந்த வங்கி 999 நாட்கள் கால அவகாசம் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 60 வயதிற்குட்பட்ட மக்களுக்கு 6.7% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.2% வட்டியையும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 18 முதல் அமலுக்கு வந்தன.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI):

2-3 ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட FD-க்களில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வழக்கமான குடிமக்களுக்கு 6.45% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 6.95% வட்டியையும் வழங்குகிறது.

பஞ்சாப் நேஷ்னல் பேங்க் (PNB):

390 நாள் கால அவகாசத்துடன் கூடிய FD-க்கு இந்த வங்கியானது வழக்கமான குடிமக்களுக்கு 6.6% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.10% வட்டியையும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்தன.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா:

இந்த வங்கி கடந்த ஆகஸ்ட் 20, 2025 அன்று முதல் அமல்படுத்தியுள்ள வட்டி விகிதங்களின்படி, 3 ஆண்டு கால அவகாசம் கொண்ட FD-க்கு வழக்கமான மற்றும் மூத்த குடிமக்களுக்கு முறையே 6.6% மற்றும் 7.1% வட்டியை வழங்குகிறது.

கனரா வங்கி:

இந்த வங்கி 444 நாள் கால அவகாசம் கொண்ட FD-க்கு வழக்கமான மற்றும் மூத்த குடிமக்களுக்கு முறையே 6.5% மற்றும் 7% வட்டியை வழங்குகிறது. கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் இந்த வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 13, 2025 7:21 AM IST

Read More

Previous Post

IPL 2026: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணைந்தார் சஞ்சு சாம்சன்? – வெளியான தகவல் | விளையாட்டு

Next Post

இன்ப்ளூயன்ஸா அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் – Malaysiakini

Next Post
இன்ப்ளூயன்ஸா அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் – Malaysiakini

இன்ப்ளூயன்ஸா அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin