FBI-க்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் பொறுப்புடன் செயல்படுவேன்.” என்று கூறியிருக்கிறார். குறிப்பாக பதவியேற்பு விழாவில் காஷ் படேல் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.

யார் இந்த காஷ் படேல்?
குஜராத்தைச் சேர்ந்த காஷ் பட்டேல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2004-ம் ஆண்டில் சட்ட படிப்பை நிறைவு செய்த காஷ் படேல் அரசு வழக்கறிஞராக பணியை தொடங்கினார். கடந்த 2013-ம் ஆண்டில் அமெரிக்க நீதித் துறையில் படேல் இணைந்தார். கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்க உளவு விவகார கமிட்டியின் நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்காக அவர் கடினமாக உழைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பலனாக தற்போது எஃப்பிஐ இயக்குநராக காஷ் படேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

