Last Updated:
Fast Tag-க்கு KYV நடைமுறை தேவையில்லை என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு. விதி மீறினால் மட்டும் KYV கேட்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு இலகுவான தீர்வு.
கார் உரிமையாளர்களின் Fast Tag-க்கு KNOW YOUR VECHILE எனப்படும் KYV நடைமுறை தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாகனம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக KYV என்ற புதிய நடைமுறை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், சுங்கச் சாவடி கட்டணத்திற்கான ஃபாஸ்டேக் சரியான வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும் என்றும் ஒருவரது ஃபாஸ்டேக்கை மற்ற நபர்கள் பயன்படுத்துவது தடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தச் சரிபார்ப்பு மீண்டும் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புகைப்படங்கள், ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றின் காரணமாக வாகன உரிமையாளர்கள் பல சிரமங்களை சந்தித்தனர்.
இந்நிலையில், கார் உரிமையாளர்களின் Fast Tag-க்கு KYV நடைமுறை தேவையில்லை என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் வங்கிகள் பாஸ்டேக் வழங்கும் போது KYV நடைமுறையை பின்பற்றத் தேவையில்லை என்றும் விதிகளை மீறும்பட்சத்தில்தான் KYV கேட்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை விளக்கமளித்துள்ளது.


