• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

FAQ : மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. தென் மாநிலங்களின் பிரச்னைக்கு தீர்வு காணம் மத்திய அரசு.. | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
FAQ : மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. தென் மாநிலங்களின் பிரச்னைக்கு தீர்வு காணம் மத்திய அரசு.. | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  1. இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நோக்கம் என்ன?

2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலாக்கத்திலுள்ள சிக்கல்களை நீக்கி, அதை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான திருத்தங்களைக் கொண்டு வருவதே இந்த மூன்று நாள் சிறப்பு அமர்வின் முக்கிய நோக்கமாகும்.

  • இந்த அமர்வில் யாரெல்லாம் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்?
  • மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள மகளிரை ஒருங்கிணைக்க ஒரு பெரிய விழிப்புணர்வுத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் துப்புரவுப் பணியாளர்கள், பெண் தொழிலாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஆயுதப்படை வீராங்கனைகள் மற்றும் பிரபலங்கள் வரை பலதரப்பட்ட பெண்கள் நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரில் காண அழைக்கப்பட்டுள்ளனர்.

  • சட்ட அமலாக்கத்தில் அரசு செய்யப்போகும் முக்கிய மாற்றம் என்ன?
  • முந்தைய திட்டத்தின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று இருந்தது. இதனால் 2034 வரை தாமதம் ஏற்பட வாய்ப்பிருந்தது. ஆனால், தற்போது 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், 2029 பொதுத்தேர்தலிலேயே 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

  • இதனால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?
  • ஆம். தற்போதுள்ள 543 இடங்களுக்குப் பதிலாக, மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதில் மாநிலங்களுக்கு 815 இடங்களும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்களும் ஒதுக்கப்படலாம். இந்த விரிவாக்கத்தின் மூலம், சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) இடங்கள் அதிகரிக்குமா?
  • மக்களவை இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதற்கேற்ப இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளும் அதிகரிக்கும். எஸ்சி (SC) இடங்கள் 84-லிருந்து 126–136 வரையிலும், எஸ்டி (ST) இடங்கள் 47-லிருந்து சுமார் 70 வரையிலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • தென்னிந்திய மாநிலங்களின் கவலை என்ன? அதற்கு அரசு என்ன தீர்வு வைத்துள்ளது?
  • புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால், மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்கள் குறைய வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது. இதனைத் தவிர்க்க, அரசு ‘தொகுதி மறுவரையறை மசோதா 2026’-ஐ கொண்டு வந்து, 2011 தரவுகளின் அடிப்படையில் விகிதாச்சாரப்படி இடங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

  • மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
  • இந்த மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மையுடன் கூடிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தேவைப்படும். இதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பிரதமர் கோரியுள்ளார். சனிக்கிழமை அன்று இதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Read More

    Previous Post

    இன்று முதல் அதிர்ஷ்டம் பொங்கும் 3 ராசிகள்… சூரியன் பெயர்ச்சியின் பலன்கள்… உங்க ராசி என்ன? – Sri Lanka Tamil News

    Next Post

    தோனிக்கு கிடைக்காத விஐபி வசதி… சச்சினை மட்டும் ஏன் ஏர்போர்ட்டில் சோதனை செய்வதில்லை? உண்மை என்ன? | Sachin Tendulkar

    Next Post
    தோனிக்கு கிடைக்காத விஐபி வசதி… சச்சினை மட்டும் ஏன் ஏர்போர்ட்டில் சோதனை செய்வதில்லை? உண்மை என்ன? | Sachin Tendulkar

    தோனிக்கு கிடைக்காத விஐபி வசதி... சச்சினை மட்டும் ஏன் ஏர்போர்ட்டில் சோதனை செய்வதில்லை? உண்மை என்ன? | Sachin Tendulkar

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin