அதேபோல், வலதுபுறத்தில் ‘India’ என்றும், ‘Bharat’ என்றும் அச்சிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் இடதுபுற வடிவமைப்பிலும் ‘RBI100INDIA’, ‘RBI500INDIA’ போன்ற எழுத்துக்களின் கலவை மறைந்திருக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 ஆகிய அனைத்து நோட்டுகளிலும் இந்த அமைப்பு ஒரே மாதிரியாகவே உள்ளது; நோட்டின் மதிப்பு எண் மட்டுமே மாறுகிறது.


