புதுடில்லி, தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு, புற்றுநோய் மற்றும் கீமோதெரபி மருந்துகள், போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக, சமீபத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் நேற்று, இது தொடர்பாக டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 10 இடங்களில், அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர்களான விபில் ஜெயின், சூரஜ் ஷாட், நீரஜ் சவுகான், பர்வேஸ் மாலிக், கோமல் திவாரி, அபினய் மற்றும் துஷார் சவுகான் உள்ளிட்டோரின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது, 65 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல முக்கிய குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், சூரஜ் ஷாட் வீட்டில் இருந்து மட்டும், 23 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement