Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கு F-35 போர் விமானங்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த விமானங்கள் லாக்ஹீட் மார்ட்டினால் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவிற்கு F-35 ரக பாதுகாப்பு விமானங்களை விற்பதாக அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கும் நிலையில் அந்த விமானத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கு இந்த ஆண்டு F-35 ரக போர் விமானங்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினால் தயாரிக்கப்படும் இந்த F-35 ரக விமானங்கள், F-35 A, F-35 B, F-35 C என மூன்று வகைகளில் கிடைக்கின்றன. இதுவரை 1000 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. F-35 A விமானத்தின் விலை ரூ.694 கோடி, F-35 B விமானத்தின் விலை ரூ.998 கோடி மற்றும் F-35 C விமானத்தின் விலை ரூ.995 கோடி ஆகும். இந்த விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.36 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மணிக்கு 1200 மைல் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த விமானம், 6000 கிலோ முதல் 8100 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஸ்டெடியான மற்றும் பாதுகாப்பான விமானம் என கூறப்படும் இதில், ஆறு இன்ஃப்ராரெட் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எந்த ஒரு விமானத்திலும் இல்லாத “Distributed Aperture System” என்கிற தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த “Distributed Aperture System” என்பது, விமானத்தைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு இருக்கும், அது எதிரே வரக்கூடிய விமானம் எந்த திசையில் இருந்து வந்தாலும் அதை எளிதில் கண்டறியும். அதேபோது, எந்த ஒரு தீ விபத்தும் நிகழாமல் தடுப்பதற்கான பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல ஏவுகணைகள் எங்கிருந்து தாக்கினாலும் அதை தாக்கி அழிக்கக்கூடிய வலிமையோடு இந்த F-35 விமானமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Also Read | “அப்பா என்ற உறவு என்னுடைய பொறுப்புகளை கூட்டியிருக்கிறது…” – முதல்வர் ஸ்டாலின்!
மேலும், இரவிலும் தெளிவாக பார்க்கும் வகையில் ‘டே நைட் விஷன்’ தொழில்நுட்பம் போன்ற சிறப்பு வசதிகளும் இந்த விமானத்தில் உள்ளன. இதேபோல துல்லியமான லொகேஷன் டிராக்கிங் தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது. எந்த இடத்தில் எந்த ஒரு ஏவுகணைகள் இருந்தாலும் அதை துல்லியமாக டிராக் செய்வதோடு மட்டுமல்லாமல் ரியல் டைமில் இன்ஃபர்மேஷன் பாஸ் செய்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக விமானிகளுக்கு கொஞ்சம் தாமதமாக தான் இன்ஃபர்மேஷன் பாஸ் ஆகும். ஆனால் இந்த விமானத்தை பொறுத்தவரை உடனுக்குடனான இன்ஃபர்மேஷன் பாஸ் ஆகும் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
இப்படியான F-35 விமானத்தை தான் இந்தியாவுக்கு வழங்க இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், இந்தியா F-35 விமானத்தை தேர்வு செய்யுமா அல்லது ரஷ்யாவின் Su-57 விமானத்தை வாங்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
– லாவண்யா
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 15, 2025 9:15 AM IST
F-35.. நவீன சண்டைக்காரன்.. இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் விமானத்தின் சிறப்பம்சங்கள் என்ன?


