• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Exit Polls | மகாராஷ்டிரா, ஜார்கண்ட் இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் பாஜக.. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 20, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
Exit Polls | மகாராஷ்டிரா, ஜார்கண்ட் இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் பாஜக.. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது. அதேபோல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளது.

விளம்பரம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 13-த் தேதி முடிவடைந்தது. மீதம் இருந்த 38 தொகுதிகளுக்கு இன்று (20-ம் தேதி) வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாகவும், பாஜக எதிரணியாகவும் தேர்தலை சந்தித்துள்ளன.

ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் முக்கிய இடங்களை வகிக்கும். கடந்த சில தேர்தல்களாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகிவருகிறது. இருந்தாலும், மக்களுக்கு கருத்துக் கணிப்பு மீதான ஆவல் இருந்துக்கொண்டே இருக்கும்.

விளம்பரம்

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 தொகுதிகளும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளும் தேவை.

இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தற்போது வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா:

ஏபிபி மெட்ரிஸ் கருத்துக் கணிப்புப்படி பாஜக கூட்டணி 150 முதல் 170 இடங்களை வெல்லும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 110 முதல் 130 இடங்களை வெல்லும் எனவும், மற்றக் கட்சிகள் 8 முதல் 10 தொகுதிகள் வெல்லும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல் பி-மார்க் கருத்துக் கணிப்பின்படி பாஜக கூட்டணி 137 முதல் 157 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 126 முதல் 146 இடங்களிலும், மற்றவை 2 முதல் 8 இடங்களிலும் வெல்லும் என சொல்லப்பட்டுள்ளது.

விளம்பரம்

CNN News18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 154 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களையும் மற்றவை 6 இடங்களையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

Peoples Pulse கருத்துக் கணிப்பின் படி, பாஜக கூட்டணி 175 முதல் 195 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 85 முதல் 112 இடங்களையும், மற்றவை 7 முதல் 12 இடங்களையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட்:

Peoples Pulse கருத்துக் கணிப்பின் படி பாஜக கூட்டணி 44 முதல் 53 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 37 இடங்களையும், மற்றவை 5 முதல் 9 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

விளம்பரம்

CNN News18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 45 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 33 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

JVC வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 42 முதல் 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 30 தொகுதிகளிலும், மற்றவை 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

.

Read More

Previous Post

தனுஷ் & நயன்தாரா பிரச்சனையால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை

Next Post

Ratan Tata | வளர்ப்பு நாய், உதவியாளருக்கு சொத்தில் பங்கு.. ரத்தன் டாடா எழுதிய உயில்! – News18 தமிழ்

Next Post
Ratan Tata | வளர்ப்பு நாய், உதவியாளருக்கு சொத்தில் பங்கு.. ரத்தன் டாடா எழுதிய உயில்! – News18 தமிழ்

Ratan Tata | வளர்ப்பு நாய், உதவியாளருக்கு சொத்தில் பங்கு.. ரத்தன் டாடா எழுதிய உயில்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin