இதுதொடர்பாக பேசியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு முக்கிய ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது’ என கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியையும் மீண்டும் திறக்க வழிவகுக்கும். இதன் மூலம் உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் பிரச்சனைகள், பொருளாதார வீழ்ச்சிகள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும். இரு நாடுகளின் இந்த அமைதி முயற்சி, மத்திய கிழக்கில் ஏற்படவிருந்த பெரிய மோதலைத் தடுத்து நிறுத்தியுள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.


