Last Updated:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். நியூஸ் 18-க்கு அளித்துள்ள அவர் பிரத்யேக நேர்காணலில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியூஸ் 18 குழுமத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி மாற்றங்களால், சாமானிய மக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பல தரப்பினருக்கும் பாதிப்புகளும் சலுகைகளும் கிடைத்துள்ளன.
குறிப்பாக, ஆரோக்கியம் மற்றும் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். நியூஸ் 18-க்கு அளித்துள்ள அவர் பிரத்யேக நேர்காணலில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
கேள்வி: பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு உங்கள் பதில் என்ன?…
பதில்: மிகவும் வருந்தத்தக்க விமர்சனம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில்கள், விவசாய திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு நன்மை அளிக்காதா?. சந்தனம், தென்னை மர விவசாயிகளுக்கான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு பெரிய பயன் தரும்.
கேள்வி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆர்ய-திராவிட போர் நடப்பதாக கூறுகிறாரே, உங்கள் பதில் என்ன?
பதில்: இது முழுக்க முழுக்க பிரிவினைவாத மனநிலை கொண்டவர்களின் எண்ணம். இதை நினைத்து வருந்த வேண்டும். காலம் காலமாக இதையே சொல்லி வருகிறார்கள்.
கேள்வி: அப்படியென்றால் பாஜகவால் தமிழ்நாட்டில் ஏன் வெல்ல முடியவில்லை?.
பதில்: வளர்ந்து வருகிறோம். நிச்சயம் வெல்வோம். தேசிய கட்சியான காங்கிரசால் கூட 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக வலுவாகவே வளர்ந்து வருகிறது.” என்று கூறினார்.
Exclusive | பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளதா..? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி!


