Last Updated:
5%, 18% என இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.
ஜிஎஸ்டி சீரமைப்பின்போது நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிகப்படியான வரி விதித்திருப்பது இரு நாட்டு வர்த்தக உறவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று புதுடெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், நான்கு அடுக்குகளுக்கு பதிலாக இனி 5%, 18% என இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், பால், பனீர், பீஸா, பிரட், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் நியூஸ் 18 தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது-
ஜிஎஸ்டி வரிகளை சீரமைப்பது குறித்து பிரதமர் மோடி என்னிடம் 8 மாதங்களுக்கு முன்பே பேசினார். நடுத்தர குடும்பங்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜிஎஸ்டி சீரமைப்புகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
September 05, 2025 4:43 PM IST
Exclusive: நடுத்தர குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து GST சீரமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.. நிதியமைச்சர் விளக்கம்


