• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Exclusive: சண்டை நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்.. பதிலடி தந்த இந்தியா.. நியூஸ்18-க்கு கிடைத்த பிரத்யேக காட்சி

GenevaTimes by GenevaTimes
May 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Exclusive: சண்டை நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்.. பதிலடி தந்த இந்தியா.. நியூஸ்18-க்கு கிடைத்த பிரத்யேக காட்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 13, 2025 6:19 PM IST

சண்டை நிறுத்தத்தை மீறி ஜம்முவில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதன் பிரத்யேக வீடியோ காட்சி நியூஸ்18-க்கு கிடைத்துள்ளது.

News18News18
News18

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதனை மீறி ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தக்கப் பதிலடியை கொடுத்துள்ளது.

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, ஆதம்பூர் விமானப்படைதளத்துக்குச் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார். பின் அங்கு உரையாற்றிய அவர், “அணு ஆயுத பிளாக் மெயிலுக்கு அடி பணிய மாட்டோம். பாகிஸ்தானின் அணு ஆயுத மோசடியை நாங்கள் கடுமையாக சாடினோம். அணு ஆயுதத் தாக்குதலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன். தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவும் நாடுகளையும் பிரித்து பார்க்க மாட்டோம். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கிக் கொள்ள இடம் இல்லாத அளவுக்கு தாக்கியுள்ளோம். வெறும் 20 நிமிடங்களில் 9 தீவிரவாத முகாம்களை தகர்த்தெறிந்துவிட்டோம். நாம் தீவிரவாத முகாம்களை அழித்ததுடன் பாகிஸ்தான் ராணுவத்தையும் தோற்கடித்துள்ளோம்.

நாங்கள் எதிரிகளின் குகைக்குள் நுழைந்து அவர்களின் முகாம்களை அழித்தோம். பாகிஸ்தானின் தீய திட்டங்கள் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தன. நாட்டுக்காக தங்களது இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர்” என பேசியிருந்தார்.

இந்நிலையில், ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில் சுமார் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த வீடியோ பிரத்யேகமாக நியூஸ்18 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது.

இந்தப் பதிலடியில், இந்திய ராணுவ வீரர்கள் குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 20 பயங்கரவாதிகளும், 10 முதல் 12 பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Location :

Jammu and Kashmir

தமிழ் செய்திகள்/இந்தியா/

Exclusive: சண்டை நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்.. பதிலடி தந்த இந்தியா.. நியூஸ்18-க்கு கிடைத்த பிரத்யேக காட்சி

Read More

Previous Post

ஆப்கானிஸ்தானில் Chess விளையாட காலவரையற்ற தடை விதித்தது தாலிபான்!

Next Post

பாகிஸ்தானின் டி20, ஒரு நாள் கிரிக்கெட் தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமனம்.. யார் இவர்?

Next Post
பாகிஸ்தானின் டி20, ஒரு நாள் கிரிக்கெட் தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமனம்.. யார் இவர்?

பாகிஸ்தானின் டி20, ஒரு நாள் கிரிக்கெட் தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமனம்.. யார் இவர்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin