[ad_1]
Last Updated:
இந்தியாவுக்கு எங்கு வாங்கினால் பலன் கிடைக்குமோ அங்குதான் இந்தியா பொருட்களை வாங்கும்
பெட்ரோல் அல்லது எந்த பொருளாக இருந்தாலும் அதை எங்கு வாங்க வேண்டும் என்பதை இந்தியாதான் முடிவு செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நியூஸ் 18 க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலை சரி செய்வதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது.
இத்தகைய சூழலில் நேற்று ஜிஎஸ்டி சீரமைப்பு வெளியிடப்பட்ட பல பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
வரி விதிப்புகளை தொடர்ந்து விளக்கம் அளித்த டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்குவதால் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில் நியூஸ் 18 தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேக பேட்டி அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகள் குறித்த கேள்விக்கு பின்வரும் பதிலை அளித்துள்ளார். அவர் கூறியதாவது-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மட்டுமல்ல; எந்த பொருட்களை வாங்கினாலும் அதுகுறித்து வாங்கும் இந்தியா தான் முடிவு எடுக்கும்.
September 05, 2025 6:36 PM IST
Exclusive : கச்சா எண்ணெயை எங்கு வாங்க வேண்டும் என்பதை இந்தியாதான் முடிவு செய்யும்.. நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்