[ad_1]
Last Updated:
டிஜிட்டல் முறையிலான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா 50 புதிய நாடுகளை அடையாளம் கண்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இன்று புதுடெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், நான்கு அடுக்குகளுக்கு பதிலாக இனி 5%, 18% என இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், பால், பனீர், பீஸா, பிரட், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியூஸ் 18 தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா புதிதாக 50 நாடுகளை அடையாளம் கண்டுள்ளது. சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்களை பல நாடுகளை ஏற்படுத்துவதில் இந்தியா ஆர்வம் காட்டுகிறது.
டிஜிட்டல் முறையிலான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. நாட்டின் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனில் இந்தியா ஒருபோதும் சமாதானம் செய்து கொள்ளாது.
September 04, 2025 7:57 PM IST
Exclusive : ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா 50 நாடுகளை அடையாளம் கண்டுள்ளது.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்