இந்நிலையில், தங்கத்தின் Exclusive: இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா? – பங்குச் சந்தை நிபுணர் சுந்தர் விளக்கம்!விலை 38% குறையுமா, அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் ‘Decode’ நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் சோமவள்ளியப்பன் மற்றும் பங்குச் சந்தை நிபுணர் சுந்தர் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
அதில் பங்குச் சந்தை நிபுணர் சுந்தர் தெரிவித்த கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை, “உலக நிச்சயத்தன்மையின் போதும், பொருளாதார வீழ்ச்சியின் போதும் தங்கத்தின் விலை உயரும். உதாரணத்திற்கு 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் தங்கத்தின் விலை உயர்ந்தது. தங்கத்தின் விலை 38% குறையும் எனும் சொல்பவர், தங்கத்தின் விலை கடந்த ஓராண்டில் அதிக அளவில் ஏறியதால், அதன் உற்பத்தி அதிகரிக்கும் அதன் மூலம் விலை குறையும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், தங்கத்தின் விலைக்கும் அதன் உற்பத்திக்கும் தொடர்பே கிடையாது. ஏனென்றால், புதிதாய் வெட்டி எடுக்கும் தங்கத்தைவிட, இங்கு ஏற்கனவே இருக்கும் தங்கத்தின் சுழற்சிதான் அதிகம்.
இதையும் படியுங்கள் : Exclusive: ”தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகும் என்பதற்கான உறுதி கிடையாது” – நிதி ஆலோசகர் சோமவள்ளியப்பன்
பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்போது தங்கத்தின் விலை உயரும். பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்போது அதனை தூக்கி நிறுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதற்கு அரசு, வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும். உதாரணத்திற்கு 2008ஆம் ஆண்டு லீமேன் பிரதர்ஸ் நெருக்கடி (lehman brothers crisis) ஏற்பட்டபோது, அமெரிக்காவில் வட்டி விகிதம் ‘0’க்கு கொண்டுவரப்பட்டது. அதேபோல், 2020 கொரோனா காலத்திலும் வட்டிவிகிதம் ‘0’க்கு கொண்டுவந்தார்கள். இதன் மூலம், மக்கள் பணத்தை சற்று கூடுதலாக செலவு செய்வார்கள் அதன் மூலம், பொருளாதாரத்தை உயர்த்தலாம்.
அதேபோல், வங்கியில் பணத்தை வைக்கும்போது குறைவான வட்டியே வருகிறது. அதே தங்கத்தில் முதலீடு செய்தால் 2% கூடுதல் பணம் கிடைக்கும் என பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வார்கள். பிரிட்டிஷ் அரசு தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்துவைத்திருந்தபோது கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதில், நெப்போலியன் போரின்போது மட்டும் தங்கத்தின் விலை சற்று உயர்வை சந்தித்து.
பிறகு 1971ல் பிரிட்டிஷ் அரசு தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வதில்லை என முடிவு செய்து தேவை மற்றும் உற்பத்தி அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கலாம் என முடிவு செய்தது. அதன்பிறகு 1980 வரை தங்கத்தின் விலையில் மாற்றமே இல்லாமல் இருந்தது.
1980ல் ஈரான் நாட்டில் அயத்தோல்லா ரூஹோல்லா கோமெய்னி செய்த புரட்சியால் எண்ணெய் வளங்கள் புரட்சியாளர்கள் கைக்கு வந்தது. அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமாட்டோம் என அறிவித்தனர். அதேபோல், செங்கடல் வழியாக சென்ற கப்பல்களை தடுத்து கலகம் செய்தனர். இதனால், உலகம் முழுக்க எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் காரணமாக ஆறே மாதத்தில் தங்கத்தின் விலை 4 மடங்கு உயர்ந்தது. லீமேன் பிரதர்ஸ் நெருக்கடியால் (lehman brothers crisis) 2008 முதல் 2013 வரை தங்கத்தின் விலை 5 மடங்கு ஏறியது. இந்த சமயத்தில் தான் அமெரிக்கா வங்கி வட்டி விகிதத்தை 0% ஆக குறைத்தது. 2013ல் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பென் பெர்னாங்கி, வட்டி விகிதம் 0 என மாற்றி ஐந்து வருடம் ஆகிவிட்டது. எனவே வட்டி விகிதத்தை உயர்த்தப்போகிறோம் என அறிவித்தார். அவர் அறிவிப்பு செய்ததும், 2013 செப்டம்பர் மாதத்தில் ஒரே நாளில் தங்கத்தின் விலை 10 மடங்கு குறைந்தது.
தற்போதைக்கு தங்கத்தின் விலை குறைய வாய்ப்பே கிடையாது. அதே கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பதற்கு காரணம், உலகத்தில் அமெரிக்க டாலர் மதிப்பில் தங்க விற்பனை நடப்பது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, இந்திய அரசின் வரி ஆகியவை தான் இந்தியாவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கிறது. இதில், இறக்குமதி வரி அடிக்கடி மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. இதில் தற்போது டிரம்பின் இந்த பொருளாதார போரால் அமெரிக்கா டாலரின் மதிப்பு இறங்குகிறது. கிட்டத்தட்ட அமெரிக்க டாலரின் மதிப்புக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அது தான் இந்த விலை சரிவுக்கு காரணம். அது சரியானதும், தங்க விலை சரிவும் நின்றுவிடும்.
April 09, 2025 5:41 PM IST

