
Last Updated:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நிறைவடைகிறது.
அதற்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பாஜக சார்பில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணத்தை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Delhi,Delhi,Delhi
January 07, 2025 11:09 AM IST

