Last Updated:
EPFO 3.0 டிஜிட்டல் பிளாட்ஃபார்மின் முக்கியமான அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனமானது 2025இல் EPFO 3.0 என்ற மேம்பாடு செய்யப்பட்ட டிஜிட்டல் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு மூலமாக சேவைகள் விரைவாகவும், அதே சமயத்தில் 8 கோடி மெம்பர்கள் சுலபமாக பயன்படுத்தக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இன்போசிஸ், விப்ரோ மற்றும் TCS போன்ற IT நிறுவனங்கள் இந்த பிளாட்ஃபார்மை நிர்வகிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. முன்னதாக ஜூன் 2025இல் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒரு சில தொழில்நுட்ப சோதனைகள் காரணமாக தாமதமாகி வருகிறது. EPFO 3.0 டிஜிட்டல் பிளாட்ஃபார்மின் முக்கியமான அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
EPFO 3.0 மூலமாக எதிர்பார்க்கப்படக்கூடிய மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று ATMகளில் இருந்து நேரடியாக PF பணத்தை வித்டிரா செய்வதற்கான ஆப்ஷன். இதற்கு மெம்பர்கள் தங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை (UAN) ஆக்டிவேட் செய்து, அவர்களுடைய வங்கிக் கணக்கோடு ஆதார் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலமாக ஊழியர்கள் அவசர பண தேவையின்போது உடனடியாக PF பணத்தை வித்டிரா செய்து கொள்ளலாம்.
அதிவேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் பேமெண்ட் சிஸ்டத்தோடு ஒத்துப் போகும் வகையில் மெம்பர்கள் UPI மூலமாக தங்களுடைய PF பணத்தை வித்டிரா செய்து அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் கிளைம்கள் மற்றும் எளிமையான திருத்த முறைகள்: மெம்பர்கள் இனி சிறிய அளவிலான திருத்தங்கள் அல்லது கிளைம் அப்டேட் போன்றவற்றிற்கு EPFO அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல தேவையில்லை. OTP சரிபார்க்கும் முறையின் மூலமாக ஊழியர்கள் இந்த திருத்தங்களை செய்து, தங்களுடைய கிளைம் ஸ்டேட்டஸை ஆன்லைனில் கண்காணிக்கலாம். இதன் மூலமாக செயல்முறை சீராக்கப்பட்டு, தாமதங்கள் ஏற்படுவது குறையும்.
மெம்பர்கள் இறந்துபோகும் பட்சத்தில், அதற்கான கிளைம் செட்டில்மெண்ட் செயல்முறையை EPFO எளிமைப்படுத்தி உள்ளது. மைனர்களுக்கு இனி பாதுகாவலர் சான்றிதழ்கள் தேவை இல்லை. இதன்மூலம் இறந்துபோன மெம்பர்களின் குடும்பங்களுக்கு உடனடி பொருளாதார ஆதரவு கிடைப்பதை உறுதி செய்துள்ளது.
இந்த புதிய பிளாட்ஃபார்ம் மூலமாக சுமூகமான, மொபைல் வாயிலாக இயங்கும் கண்காணிப்பு செயல்முறைகள், கிளைம்கள் மற்றும் அக்கவுன்ட் விவரங்களை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் சரிபார்ப்பதற்கான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் மாற்றம் என்பது சௌகரியம் மற்றும் வெளிப்படைத் தன்மைக்கான ஒரு மிகப்பெரிய படியாக இருக்கும் என்று நம்பலாம்.
August 28, 2025 9:41 PM IST


