உங்களது ஊழியரின் வருங்கால வைப்பு நிதி ( EPF) பங்களிப்பை அதிக வட்டி விகிதங்களுக்கு மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை நீங்கள் VPF (Voluntary Provident Fund) மூலமாக செய்யலாம். எனினும், அதனை நீங்கள் நேரடியாக செய்ய இயலாது. மாத வருமானம் வாங்கக்கூடிய நபர்களின் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்டாக (PF) சேமிக்கப்படுகிறது. ஒரு சிறிய முயற்சியின் மூலமாக இந்த PF தொகையை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
நீண்ட கால முதலீட்ட இலக்குகளை அடைவதற்கு PF ஒரு பிரபலமான வழியாக பார்க்கப்படுகிறது. ஒரு ஊழியர் தனது அடிப்படை சம்பளம் மற்றும் டியர்னஸ் அளவன்சில் (DA) இருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீதத்தை PF பேலன்ஸுக்கு பங்களிக்கிறார். உதாரணமாக, ஒரு நபரின் அடிப்படை சம்பளம் மற்றும் DA 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இப்படி இருக்க அவரது PF பங்களிப்பு என்பது ₹ 18000 x 12/100= ரூ. 2,160.
ஆயினும், தனது நிறுவனம் குறைந்தபட்ச தொகையை PF பேலன்ஸுக்கு பங்களித்து வரும் பட்சத்தில், அதனை அதிகரிக்கும் பொருட்டு சம்பள அமைப்பை மாற்றி அமைப்பதற்கான அனுமதியை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த கருவியை பயன்படுத்தி ஊழியர் PF பங்களிப்பை அதிகரிக்கும்படி தங்களது நிறுவனத்திடம் கோரலாம்.
இதனால் உங்கள் கைக்கு கிடைக்க கூடிய சம்பளத்தில் ஓரளவு பணம் குறைக்கப்பட்டாலும் அதிக PF பேமெண்ட் காரணமாக நீங்கள் அதிக பணத்தை சேமித்து, அதன் விளைவாக வரியையும் சேமிக்க முடியும். மேலும் ஒவ்வொரு மதிப்பீடு சுழற்சிக்கு பிறகு உங்கள் கைக்கு வரக்கூடிய பணமும் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாது.
உங்களது EPF பங்களிப்பை 12 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிப்பது எப்படி?
VPF என்பது ஒரு நிறுவனத்தின் அப்ரூவலை பெற்ற பிறகு அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக ஒரு ஊழியர் அவரது EPF பங்களிப்பை தனது விருப்பம் போல எந்த ஒரு தடையும் இல்லாமல் அதிகரித்துக் கொள்ளலாம். VPF பலன்கள் EPF பலன்களுக்கு சமமாக கிடைக்கிறது.
VPF என்பது ஒரு ஆண்டுக்கு 8.10 சதவீத ரிட்டன் வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக ஒருவர் வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C -யின் கீழ் வரி சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் மெச்சூரிட்டி ஆகும் பொழுது கிடைக்கக்கூடிய ரிட்டன்களுக்கு வரி விதிக்கப்படாது.
எனினும் ஒரு நபர் PF மற்றும் VPF ஆகிய இரண்டிலும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் பட்சத்தில், EPF மூலமாக கிடைக்கும் ரிட்டன்களுக்கு வரி செலுத்த வேண்டும்.
Also Read : டெர்ம் லோன் vs ஓவர்டிராஃப்ட் லோன்… கடன் வாங்க சிறந்தது எது?
VPF இல் முதலீடு செய்வது எப்படி?
VPF இல் முதலீடு செய்ய நீங்கள் உங்களது HR இடம் தெரிவிக்க வேண்டும். அவர்களது உதவியுடன் நீங்கள் EPF அக்கவுண்ட் உடன் சேர்த்து VPF அக்கவுண்டை திறக்கலாம். இதற்கு நீங்கள் மாத டிடக்ஷன்கள், சதவீதங்கள் போன்ற ஒரு சில விவரங்கள் அடங்கிய ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். VPF -க்கான லாக்-இன் பீரியட் 5 வருட காலம்.
வரிச்சலுகைகள் மற்றும் டிரான்ஸ்ஃபர் :
VPF விதிகள் என்பது EPF விதிகளை போன்றது தான். நீங்கள் உங்கள் நிறுவனத்தை மாற்றினால் VPF தொகையை புதிய நிறுவனத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு வரியும் வசூலிக்கப்படாது. மேலும் 80C பிரிவின் கீழ் ஒரு வருடத்திற்கு 1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளை கிளைம் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…